கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில் இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில் இணையிலே நின்திருப் புகழினை நான் பாட இணையிலே நின்திருப் புகழினை நான் பாட அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட அரகர சிவசுத மால்மருகா என அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
அசைந்தாடும் மயில் ஒன்று காணும் - நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!(அசைந்தாடும்)
இசையாறும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் - என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்
எங்காகிலும் எமது இறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் - அருள் பொங்கும் முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட மயக்கும் விழியாட மலரணி களாட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்) அசை போடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலைபோல நின்று நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால் ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று! திசைதோறும் கோபாலன் நின்று - மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதைபாட (எங்காகிலும் எமது இறைவா இறைவா)
"குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா" என்ற ராஜாஜியின் பாடலைக் கேட்டால் மனம் பரவசப்படுகிறது. ஆண்டாள் நாச்சியார் தன் பாசுரத்தில் ""குறையொன்றும் இல்லாத கோவிந்தா!'' என்று கண்ணனைப் போற்றுவதைக் காணலாம். ஆனால், குறையொன்றுமில்லாத விஷ்ணுவுக்கும் முன்பு ஒரு குறை ஏற்பட்டதாம். வால்மீகி மகரிஷி ராமாவதாரத்தில் பட்டாபிஷேகத்தைப் பற்றி வர்ணிக்கும்போது, "வசிஷ்டர் வாமதேவாதி ரிஷிகள் எட்டுபேர் கூடி நின்று ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த காட்சி, தேவலோகத்தில் இந்திரனுக்கு அஷ்டவசுக்கள் எட்டுப்பேர் கூடிநின்று பட்டம் சூட்டியது போல இருந்தது'' என்று குறிப்பிட்டுவிட்டார். ராமபிரானோ ஏகபத்தினி விரதனாக, சீதையை மட்டுமே மனைவியாக ஏற்று வாழ்ந்தவர். இந்திரனோ பெண் பித்தன். கவுதம ரிஷியின் பத்தினி அகல்யாவை மறைமுகமாக நாடிச் சென்றவன். இந்த வால்மீகி இந்திரனோடு தன்னை ஒப்பிட்ட விதம், பெருமாளுக்கு பெரிய மனக்குறையாக இருந்தது. இந்த மனக்குறையை விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் போக்கிக் கொண்டார். தேவேந்திரன் தன்னை வழிபடாத ஆயர்களைத் துன்புறுத்தும் விதத்தில் ஆயர்பாடியில் அடைமழை பொழியச் செய்தான். அந்த சமயத்தில் கிருஷ்ணர் கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்து ஆயர்களையும் பசுக்களையும் காப்பாற்றினார். இந்திரனே தன் தவறை உணர்ந்து கிருஷ்ணரிடம் ஓடிவந்து சரணாகதி அடைந் தான். பசுக்களையும், ஆயர்களையும் காத்தவன் என்னும் பொருளில் "கோவிந்தன்'' என்ற திருநாமம் சொல்லி வாழ்த்தி, கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தான். இந்த வைபவத்தை "கோவிந்த பட்டாபிஷேகம்' என்பர். ஆயர்கள் கண்ணனையே தங்கள் மன்னனாக ஏற்று அன்றுமுதல் "கோவிந்தராஜன்' என்று அழைத்தனர். ராமபட்டாபிஷேகத்தில் நேர்ந்த குறை கிருஷ்ணரின் கோவிந்த பட்டாபிஷேகத்தில் நீங்கியது.