Showing posts with label கண்ணன் என் காதலன். Show all posts
Showing posts with label கண்ணன் என் காதலன். Show all posts

Saturday, November 10, 2012

கண்ணன் என் காதலன்


கண்ணன் என் காதலன் 
மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் கவிஞர்!

இறைவனுக்குச் சூட்டவேண்டிய மாலையை  தன் தலையில்  சூடிப் பார்த்துவிட்டு,"நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே? நான் முதலில் சூடிப் பார்த்து விட்டு அவருக்குச் சூட்டினால் என்ன ? "என்று தந்தையிடம் கேட்டிருக்க முடியுமா?


ஆண்டாள் இறைவனுக்குக்காக தந்தை கட்டி வைக்கும் மாலைகளை முதலில் தான் சூடி ஒரு கிணற்றின் நீரில் அழகு பார்த்துவிட்டுதான் அதைக்கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்து வருவாள்.

பிள்ளைப் பருவத்தில் அரங்கன் மீது பித்தான அன்பு பின்பு காதலாகியது பருவ வயதில்
அரங்கன் மீது ஆண்டாளுக்கு அத்தனைக்காதல்!


அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.
அதற்கு சாட்சி இந்தப்பாடல்.

ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.

'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?

யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!
அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே! 

சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின், உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.


ஒரு நல்ல விஷயத்தோட ஆரம்பிக்கலாமா?


கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்ப்வளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருபொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!

உன்னோடுடனே யொருகடலில் வார்வாரை
இன்னா ரினையரென் றெனண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே!

உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே!

பதினாறு மாயிருவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டார்போல் மாதவன்றன் வாயமுதம்
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெருஞ்சங்கே!

- நாச்சியார் திருமொழி

கருப்பூரம் என்றால் மாலவனுக்கு உகந்த பச்சை கற்பூரம்.
கமலப்பூ என்றால் கமலப்பூ தாமரை
பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம் சந்தேகம் கேட்கிறாள்.
மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!