Thursday, November 22, 2012

குட்டிக் கண்ணனே!-பெரியாழ்வார்

பெரியாழ்வார் 
செக்கர் இடை நுனிக் கொம்பில் தோன்றும்
சிறுபிறை முளை போல
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே 
நளிர் வெண்பல் முளை இலக
அக்கு வடம் உடுத்து ஆமைத் தாலி பூண்ட
அனந்த சயனன்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன்
தளர் நடை நடவானோ?
பொருள்: குட்டிக் கண்ணனே! நீ சிரிக்கும்போது பவளம் போல சிவந்த வாயில் குளிர்ச்சியான வெண்ணிறப் பற்கள் இரண்டு அழகூட்டுகின்றன. இக்காட்சி, செவ்வானத்தில் தவழும் பிறைச்சந்திரன், மரக்கிளையின் உச்சியில் தோன்றுவது போல இருக்கிறது. உன் இடுப்பிலே சங்குவடமும், கழுத்திலே ஆமைத்தாலியும் அணிந்திருக்கிறாய். (அக்காலத்தில் குழந்தைகளுக்கு காப்புக்கயிறாக ஐம்படைத்தாலி, ஆமைத்தாலி, மாங்காய்க்காசு, நாய்க்காசு ஆகியவை அணிவது வழக்கம்) பாம்பணையில் பள்ளி கொண்டவனே! நீலமேனி வண்ணனே! வசுதேவரின் மகனே! தளர்நடையிட்டு வருவாயாக. 

No comments:

Post a Comment