Sunday, November 25, 2012

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
(கண்ணன் வருவான்)

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க

கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க...
தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான்...உறங்க வைத்தான்..
ஆரிரோ ஆரி ராரி ராரி ராரி ராரிரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ராராரோ
(கண்ணன் வருவான்)ஆரிரோ ஆரி ராரி ராரி ராரி ராரிரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ராராரோ
(கண்ணன் வருவான்)

கணபதியே வருவாய் அருள்வாய்

கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)

மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)

ஏழு சுரங்களில் நான் இசைபாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட

தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கணீர் என்றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே
)

குறையொன்றும் இல்லாத கோவிந்தா

"குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா" என்ற ராஜாஜியின் பாடலைக் கேட்டால் மனம் பரவசப்படுகிறது. ஆண்டாள் நாச்சியார் தன் பாசுரத்தில் ""குறையொன்றும் இல்லாத கோவிந்தா!'' என்று கண்ணனைப் போற்றுவதைக் காணலாம். ஆனால், குறையொன்றுமில்லாத விஷ்ணுவுக்கும் முன்பு ஒரு குறை ஏற்பட்டதாம். 
வால்மீகி மகரிஷி ராமாவதாரத்தில் பட்டாபிஷேகத்தைப் பற்றி வர்ணிக்கும்போது, 


"வசிஷ்டர் வாமதேவாதி ரிஷிகள் எட்டுபேர் கூடி நின்று ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த காட்சி, தேவலோகத்தில் இந்திரனுக்கு அஷ்டவசுக்கள் எட்டுப்பேர் கூடிநின்று பட்டம் சூட்டியது போல இருந்தது'' என்று குறிப்பிட்டுவிட்டார். 


     ராமபிரானோ ஏகபத்தினி விரதனாக, சீதையை மட்டுமே மனைவியாக ஏற்று வாழ்ந்தவர்.  

      இந்திரனோ பெண் பித்தன். கவுதம ரிஷியின் பத்தினி அகல்யாவை மறைமுகமாக நாடிச் சென்றவன். 

      இந்த வால்மீகி இந்திரனோடு தன்னை ஒப்பிட்ட விதம், பெருமாளுக்கு பெரிய மனக்குறையாக இருந்தது. இந்த மனக்குறையை விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் போக்கிக் கொண்டார்.
 
     தேவேந்திரன் தன்னை வழிபடாத ஆயர்களைத் துன்புறுத்தும் விதத்தில் ஆயர்பாடியில் அடைமழை பொழியச் செய்தான். அந்த சமயத்தில் கிருஷ்ணர் கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்து ஆயர்களையும் பசுக்களையும் காப்பாற்றினார். இந்திரனே தன் தவறை உணர்ந்து கிருஷ்ணரிடம் ஓடிவந்து சரணாகதி அடைந் தான். 


     பசுக்களையும், ஆயர்களையும் காத்தவன் என்னும் பொருளில் "கோவிந்தன்'' என்ற திருநாமம் சொல்லி வாழ்த்தி, கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தான். இந்த வைபவத்தை "கோவிந்த பட்டாபிஷேகம்' என்பர். ஆயர்கள் கண்ணனையே தங்கள் மன்னனாக ஏற்று அன்றுமுதல் "கோவிந்தராஜன்' என்று அழைத்தனர். ராமபட்டாபிஷேகத்தில் நேர்ந்த குறை கிருஷ்ணரின் கோவிந்த பட்டாபிஷேகத்தில் நீங்கியது.

அதரம் மதுரம் வதனம் மதுரம்

Video
ஸ்ரீ-ஹரீ-ஓம்
                                                                Another video

(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே
!


(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்

சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சொல்லும் இனிதே! குணமும் இனிதே

! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர: - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே 


(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(6) குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே







(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே
!

Thursday, November 22, 2012

வேய்ங்குழல்


வேய்ங்குழல் 

எங்கிருந்து வருகுவதோ?-ஒலி 
யாவர் செய்குவதோ?-அடி தோழி!
1)
குன்றினின்றும் வருகுவதோ?-மரக் 
             கொம்பினின்றும் வருகுவதோ?-வெளி 
மன்றினின்று வருகுவதோ?-என்றன் 
             மதிமருண்டிடச் செய்குதடி!-இஃது (எங்கிருந்து)
2)
அலையொலித்திடும் தெய்வ -யமுனை 
              யாற்றினின்றும் ஒலிப்பதுவோ?-அன்றி
இலையொலிக்கும் பொழிலிடை நின்றும் 
             எழுவதோ இஃதின்னமுதைப்போல்?(எங்கிருந்து)
3)
காட்டினின்றும் வருகுவதோ? -நிலாக் 
             காற்றைக் கொண்டு தருகுவதோ?-வெளி
நாட்டினின்றுமித் தென்றல் கொணர்வதோ?
            நாதமிஃதென் உயிரையுருக்குதே!(எங்கிருந்து)
4)
பறவை யேதுமொன்றுள்ளதுவோ!-இங்ஙன்
              பாடுமோ அமுதக் கனற்பாட்டு?
மறைவினின்றுங் கின்னரராதியர்
             வாத்தியத்தினிசை யிதுவோ அடி!(எங்கிருந்து)
5)
கண்ணனூதிடும் வேய்ங்குழல் தானடி!
                காதிலேயமு துள்ளத்தில் நஞ்சு ,
பண்ணன்றாமடி பாவையர்வாடப் 
                யெய்திடும் அம்படி தோழி!(எங்கிருந்து)

குட்டிக் கண்ணனே!-பெரியாழ்வார்

பெரியாழ்வார் 
செக்கர் இடை நுனிக் கொம்பில் தோன்றும்
சிறுபிறை முளை போல
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே 
நளிர் வெண்பல் முளை இலக
அக்கு வடம் உடுத்து ஆமைத் தாலி பூண்ட
அனந்த சயனன்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன்
தளர் நடை நடவானோ?
பொருள்: குட்டிக் கண்ணனே! நீ சிரிக்கும்போது பவளம் போல சிவந்த வாயில் குளிர்ச்சியான வெண்ணிறப் பற்கள் இரண்டு அழகூட்டுகின்றன. இக்காட்சி, செவ்வானத்தில் தவழும் பிறைச்சந்திரன், மரக்கிளையின் உச்சியில் தோன்றுவது போல இருக்கிறது. உன் இடுப்பிலே சங்குவடமும், கழுத்திலே ஆமைத்தாலியும் அணிந்திருக்கிறாய். (அக்காலத்தில் குழந்தைகளுக்கு காப்புக்கயிறாக ஐம்படைத்தாலி, ஆமைத்தாலி, மாங்காய்க்காசு, நாய்க்காசு ஆகியவை அணிவது வழக்கம்) பாம்பணையில் பள்ளி கொண்டவனே! நீலமேனி வண்ணனே! வசுதேவரின் மகனே! தளர்நடையிட்டு வருவாயாக. 

Saturday, November 10, 2012

இராமனின் பெயர்


இராமனின் பெயர் 
நியமங்கள் வேண்டாம். தானதர்மங்கள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். அவன் (இராமன்) பேரைப் பாடுவதே போதுமானதுன்னு சொல்லிதான் திவ்யநாமமும், பஜனையும்னு சொல்லி விட்டுட்டு போயிருக்காங்க.

அண்டங்களெல்லாம் தன் உடலின் ஒரு தூசிக்குக்கூட ஒப்பிலாத அப்பன் தன் அளப்பெரும் கருணையால் தாங்கிவந்த இராம வடிவத்தை நினைப்போரின், அவனைப் பற்றி பேசுவோரின் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பான் அனுமன். ஆஞ்சநேயனை அதனால் தனியே வழிபடவே வேண்டாம். 

மாணிக்கவாசகர்

மதுரை திருவாதவூரில்  அவதரித்த மாணிக்கவாசகர், அண்ணாமலையாரை வணங்க வருமாறு அழைத்த பாடல்களே மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை ஆகும். 20 பாடல்கள் கொண்ட இந்த பாவை பாடப்பாட தித்திக்கும். மார்கழியில் வீட்டுக்கு வீடு பாடும் இந்தப் பாடல் அண்ணாமலையாரைச் சிறப்பிக்கின்றன. குறிப்பாக "அண்ணாமலையார் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்' என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தக்கது. 

மாணிக்கவாசகர்


Why look at his ashes
or fear his serpent
or heed his elusive
Vedic talk?
all you need to know is this
he is the essence
the god of all
that lives and moves

- Manikkavachakar-மாணிக்கவாசகர்

மதுரை திருவாதவூரில்  அவதரித்த மாணிக்கவாசகர், அண்ணாமலையாரை வணங்க வருமாறு அழைத்த பாடல்களே மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை ஆகும். 20 பாடல்கள் கொண்ட இந்த பாவை பாடப்பாட தித்திக்கும். மார்கழியில் வீட்டுக்கு வீடு பாடும் இந்தப் பாடல் அண்ணாமலையாரைச் சிறப்பிக்கின்றன. குறிப்பாக "அண்ணாமலையார் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்' என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தக்கது. 

கண்ணன் என் காதலன்


கண்ணன் என் காதலன் 
மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் கவிஞர்!

இறைவனுக்குச் சூட்டவேண்டிய மாலையை  தன் தலையில்  சூடிப் பார்த்துவிட்டு,"நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே? நான் முதலில் சூடிப் பார்த்து விட்டு அவருக்குச் சூட்டினால் என்ன ? "என்று தந்தையிடம் கேட்டிருக்க முடியுமா?


ஆண்டாள் இறைவனுக்குக்காக தந்தை கட்டி வைக்கும் மாலைகளை முதலில் தான் சூடி ஒரு கிணற்றின் நீரில் அழகு பார்த்துவிட்டுதான் அதைக்கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்து வருவாள்.

பிள்ளைப் பருவத்தில் அரங்கன் மீது பித்தான அன்பு பின்பு காதலாகியது பருவ வயதில்
அரங்கன் மீது ஆண்டாளுக்கு அத்தனைக்காதல்!


அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.
அதற்கு சாட்சி இந்தப்பாடல்.

ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.

'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?

யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!
அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே! 

சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின், உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.


ஒரு நல்ல விஷயத்தோட ஆரம்பிக்கலாமா?


கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்ப்வளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருபொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!

உன்னோடுடனே யொருகடலில் வார்வாரை
இன்னா ரினையரென் றெனண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே!

உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே!

பதினாறு மாயிருவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டார்போல் மாதவன்றன் வாயமுதம்
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெருஞ்சங்கே!

- நாச்சியார் திருமொழி

கருப்பூரம் என்றால் மாலவனுக்கு உகந்த பச்சை கற்பூரம்.
கமலப்பூ என்றால் கமலப்பூ தாமரை
பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம் சந்தேகம் கேட்கிறாள்.
மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!